Saturday 27th of April 2024 05:33:16 PM GMT

LANGUAGE - TAMIL
சமூக முடக்கல்
பிரான்ஸில் சமூக முடக்கல் தளா்வு; செவ்வாயன்று அறிவிக்கிறார் பிரதமா்!

பிரான்ஸில் சமூக முடக்கல் தளா்வு; செவ்வாயன்று அறிவிக்கிறார் பிரதமா்!


பிரான்ஸில் தற்போது அமுலில் உள்ள கொரோனா வைரஸ் சமூக முடக்கல் நடவடிக்கைகளை தளர்த்தும் அறிவிப்பை பிரதமர் எட்வார்ட் பிலிப் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

சமூக முடக்கலைத் தளா்த்தும் பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து அது குறித்து பாராளுமன்றில் விவாதம் இடம்பெற்று இந்த யோசனை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அரவது அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மார்ச் 17 முதல் சமூக முடக்கல் உத்தரவைப் பிறப்பித்தார். மே 11 வரை சமூக முடக்கல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையி்ல் சமூக முடக்கல்களைத் தளா்த்தும் நோக்கத்தை ஜனாதிபதி மக்ரோன் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸின் புதிய தொற்றுக்களைத் குறைக்கும் திட்டத்துடன் தொடா்ந்தும் சில தடைகள் சில பகுதிகளில் இருக்கக்கூடும் என்றாலும் மே 11 அன்று சிறு வியாபார நிறுவனங்களை மீண்டும் திறக்கலாம் என பிரான்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்சில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,614 ஆக பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE